Monday 27 October, 2014

தடை

எப்போதும் பரபரப்பாக இருப்பவர் அந்த முதலாளி, புத்தம் புதிய ஹோண்டா கார் வந்ததும், முருகனிடம் ஆசி வாங்கி வர குடும்பத்துடன் புறப்பட்டார். வேகத்தடை எதிர்பார்த்ததை விட மேடாக இருந்ததால் க்ரீச் என்ற சத்தத்தோடு வாகனம் துள்ளிக்கொண்டு போய் நின்றது, பதட்டத்தில் இருந்த ஓட்டுனரை "மெதுவா போவே" என்று சீறினார். மறுபடியும் வேறு ஒரு வேகத்தடையில் அதே க்ரீச் .... இம்முறை "வண்டியை விட்டு இறங்கு வே" என்று சப்தம் போட்டுக்கொண்டே கதவை திறக்க முயல "வேண்டாங்க" என்றாள் மனைவி. சமரசமாகி பிரயாணம் தொடர்ந்தது, கோவில் தெரு முனையிலேயே கூட்டமாக இருந்ததால் ஊர்ந்து தான் செல்லவேண்டி இருந்தது, முகப்பில் உள்ள பிள்ளையார் கோவிலை தாண்டியதும் தெறித்து வந்த ஒரு தேங்காய் சில்லு முதலாளியின் இடது புருவத்தில் சுரீரென்று விழுந்தது, குழந்தைகள் குபுக் என சிரித்தினர், அவரோ சிரிக்காத மனைவியை முறைத்து விட்டு, "என்னவே சிரிப்பு ரோட்ட பாத்து ஒட்டு" என்று ஓட்டுனரை அதட்டினார். "பாட்டி! இது தான் சாமி கண்ண குத்துறதா?" டேய் சும்மாருடா பாட்டி பேரனிடம் கிசுகிசுத்தார். "நீ தானே சொன்னே கோபமாய் பேசினால் குணத்தை இழப்பீர்கள் ன்னு", இது மகள். "இப்போ இங்க என்ன நடந்ததுன்னு ஆளாளுக்கு பேசறீங்க", கர்ஜித்தார் முதலாளி . "அப்பா நீ பேசறது என்னவாம்" என்று மகள் சொன்னதும், கோபத்தில் வண்டியைவிட்டு விறு விறு ன்னு நடந்து கோவிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த பட்டர் முன்னால் சென்ற சிறுவனிடம் உரத்த குரலில் சொல்வது கேட்டது "கழட்டு, என்னதான் வேகமாக இருந்தாலும் கழட்டிட்டு தான் போவணும்" , அவனோ அவசரத்தில் சட்டையை கழட்டி பனியனை கீழே விட்டு செல்கிறான், வெகு அருகில் வந்த முதலாளி அதை கவனித்து "எலே பனியன்" என்று கூப்பிட்டு, அவனின் வெள்ளை பனியனில் அந்த சோப்பு கம்பெனி விளம்பரதின்னுடே இருந்த வாசகம் "சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பீர்கள்" இரண்டு முறை படிக்கிறார், அவனிடம் கொடுக்கும் முன் . என்ன தோன்றியதோ, பின்பக்கம் திரும்பி மனிவியிடம் "சுந்தரையும் கோவிலுக்கு உள்ளார வரச்சொல்லு, வேகத்தடையை இம்புட்டு பெருசா போட்டா பாவம் அவன் என்ன செய்வான்"என்றார்.

No comments: