Thursday 27 May, 2010

பந்து

நேற்று பீச்சில் நடந்து போகும்போது சிறுவன் பெரிய கால்பந்தை கடலுக்குள் அடித்து விளயடிகொண்டிருந்தான், பந்து அலையில் பட்டு திரும்ப அவன் காலுக்கே வந்து சேர்ந்தது. இங்கிருந்து அடிக்கும்போது அலை அதை உள்வாங்கி கரைக்கு வரும்போது பந்தையும் சேர்த்து கொண்டு சேர்த்தது. குஷியாக விளையாடிகொண்டிருந்த அவன் ஒரு முறை அடித்தபோது பந்து திரும்ப வரவில்லை, அலை பின்னோக்கி எடுத்து சென்றுவிட்டது. கொஞ்ச நேரம் கடலை உற்று பார்த்த சிறுவன் அழ ஆரம்பித்துவிட்டான், கிட்டே சென்று சமாதனம் செய்யலாம் என்று போனபோது அவன் சொன்னான் "பந்து தொலைந்ததுக்காக அழவில்லை வீட்டுக்கு போனால் அம்மா கத்துவார்கள் என்ன பதில் சொல்ல?"

விளையாடினால் பந்து தொலைய தானே செய்யும் இந்த உண்மை ஏன் புரியவில்லை?